இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் அந்த இளைஞர்கள் யார் என்பது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டார். இதனை அடுத்து அந்த மாணவர்களை கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அழைத்துச் சென்றனர், மேலும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்தனர். சாகசத்தில் ஈடுபடுத்திய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இளைஞர்களின் பெற்றோர்களை அழைத்து இதுபோன்று இனிமேல் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
தோடா நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு