திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும், சரியான எடையில் பொருட்கள் வழங்கப்பட வேண்டும், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட வேண்டும், அனைத்து நியாய விலை கடைகளுக்கும் இடையாளரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.