பாதிக்கப்பட்ட சிறுமி திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் காவல்துறையினர் ராஜாவை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சூழலில் பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். கொடுமை இழைத்த வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட வாமடம் பகுதி பொதுமக்கள் மற்றும் அச்சிறுமியின் உறவினர்கள்,
தில்லை சாஸ்திரி ரோட்டில் இன்று(ஆக.21) காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தில்லைநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் வாமடம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தற்கு திரண்டு சென்று மனு கொடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.