மணப்பாறை அருகே கார் மோதி சலூன் கடைக்காரர் பலி

மணப்பாறை அருகே புதுவாடி புதூரைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் கருப்பையா, இன்று காலை மணப்பாறை - திண்டுக்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வையம்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி