திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உணவக ஊழியா் மா்ம மரணம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் ஓலைப்பாடி பகுதியைச் சேர்ந்த வெங்கடேச பெருமாள் (49) என்ற திருச்சி தனியாா் உணவு விடுதி ஊழியர், உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், மருத்துவமனையின் சிடி ஸ்கேன் பரிசோதனைக் கூடம் அருகே தலையில் அடிபட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி