முசிறி அருகே பெண் மர்ம சாவு உறவினர்கள் சாலை மறியல்

முசிறி அருகே அரியனாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாரதி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது கணவர் பாரதிராஜாதான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனால், அவர்கள் பாரதியின் உடலை வாங்க மறுத்து முசிறி அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலைக் கைவிடச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி