சமயபுரம்: ரம்ஜான்; ஆட்டுச்சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ச. கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும். இங்கு சராசரியாக குறைந்தபட்சம் 25 லட்சத்திலிருந்து 50 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகும். 

ரமழான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் சுமார் ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 2 கோடி வரை ஆடுகள், அதன் எடை, தரத்திற்கேற்ப விற்பனையாகும். இந்நிலையில், நாளை (திங்கட்கிழமை) ரமழான் பண்டிகை என்பதால் ஆடுகளை விற்பனை செய்வதற்காக நூற்றுக்கணக்கான ஆட்டுவியாபாரிகள் நேற்று அதிகாலை 4.30 மணியிலிருந்தே ஆடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், கேங்கைவல்லி, ஆத்தூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. 

ஆடுகளை அதன் எடைக்கு ஏற்ப பேரம் பேசி வாங்கிச் சென்றனர். ஒரு ஆடு சுமார் ரூ. 7 ஆயிரத்திலிருந்து ரூ. 15 ஆயிரம் வரை விலை போனது. வழக்கமாக வியாபாரிகள் கொண்டுவரும் ஆடுகளின் எண்ணிக்கையை விட அதிகமான அளவில் நேற்று சந்தைக்கு வந்தன. ஆடுகளை வாங்க அதிகமான அளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்தனர். இதனால் ஆட்டுச்சந்தைகளைக் கட்டியது. நேற்று நடந்த சந்தையில் சுமார் ரூ. 2 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இதனால் வியாபா

தொடர்புடைய செய்தி