குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்ததால் மக்கள் அதிர்ச்சி

திருச்சியில் 19வது , வார்டு பெரியகடை வீதி, பீரங்கிகுளம் , கள்ளத்தெரு, தேவர் பூங்கா, மேலபுலிவார்டு, சுண்ணாம்புக்காரத் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த பகுதிகளில் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இரு தினங்களுக்கு முன்பு மாநகராட்சி மேயர் அன்பழகன் இந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்யவும், குளோரின் அளவை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார். இந்த நிலையில் நேற்று சுண்ணாம்புக்கார தெரு பகுதியில் குடி நீருடன் கழிவு நீர் கலந்து வந்ததோடு மட்டும் அல்லாமல் குடிநீரில் ஏராளமான புழுக்கள் நெளிந்ததால் அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி