திருச்சி மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (12ஆம் தேதி) இருசக்கர வாகனத்தில் செங்குறிச்சி பிரிவு சாலை அருகே சென்றபோது, சாலையில் இருந்த பேரிகார்ட் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.