திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, செல்போனில் அதிகம் பேசியதால் பாட்டி மற்றும் சித்தி கண்டித்ததால் கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். சிறுமியின் தந்தை பிரிந்து சென்ற நிலையில், தாய் துபாயில் வேலை செய்து வருகிறார். சிறுமி பாட்டியுடன் தங்கி பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.