இந்நிகழ்விற்கு திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கத் தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மைதீன் வரவேற்றார். விழாவில் கல்வி ஊக்கத்தொகையாக 60 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.
விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.