மருங்காபுரி அருகே மல்லிகை பட்டியைச் சேர்ந்த தயானந்தன், நிர்மல், மனோகரன் ஆகிய மூவர் இருசக்கர வாகனத்தில் தளம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தயானந்தன் உயிரிழந்தார். நிர்மல், மனோகரன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உடற்கூராய்வுக்குப் பின் தயானந்தனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த துவரங்குறிச்சி போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.