மண்ணச்சநல்லூர்: குடிப்பழக்கத்தை கண்டித்த தந்தை மகன் தற்கொலை

மண்ணச்சநல்லூர் காவல் நிலையத் எல்லைக்குட்பட்ட திருப்பஞ்சலி கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 26) திருமணம் ஆகாதவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவரை அவருடைய தந்தை தனபால் கண்டித்துள்ளார். தொடர்ந்து மது அருந்திவந்ததால் அவருடைய தந்தை நேற்று அவரை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த சரண்ராஜ் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்துத் தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் அவரது உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி