லால்குடி அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நபர் தற்கொலை

லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் பாஸ்கர். இவருக்கு திருமணம் ஆகி கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக இவருடைய மனைவி இவரை பிரிந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இதனால் ஏற்பட்ட தொடர் மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் (ஜூன் 14) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவருடைய தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி