காட்டுப்புத்தூர்: கால்வாயில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே காடுவெட்டி மனபோக்கி கால்வாயில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த மூதாட்டி யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி