திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்: பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தொண்டு செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் சென்றது வருத்தம் தான். நிறைய இடங்களில் மக்களே வருத்தப்படுகின்றனர். தொண்டர்களுக்கு வருத்தம், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு கட்சியினர் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆனால் தோழமை கட்சிக்கு கொடுக்கப்பட்டது. சகோதரர் துரை முருகன் வெற்றி பெற்று செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். வருகின்ற தேர்தலில் திருச்சியில் போட்டியிடுவதற்கான என்னுடைய குரல் ஒலிக்கும் என்றார்.