திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை

டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி ரயில் நிலையத்தில், வெடிகுண்டு சோதனைப் பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் விரிவான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்பு நிலையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்தி