லால்குடி அருகே உள்ள ஆங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் பிரசாத் இவர் ஓட்டல் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சம்பவம் நடந்த நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற லால்குடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.