லால்குடி அருகே அரசு பேருந்து நடத்தினர் தூக்கிட்டு தற்கொலை

லால்குடி அருகே உள்ள பெருவள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், அதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வந்தும் பலனளிக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய மனைவி தீபா தேவி அளித்த தகவலின் பேரில் லால்குடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி