திருச்சியில் கார் கண்ணாடிகளை சேதப்படுத்தும் கஞ்சா கும்பல்

திருச்சி தாரா நல்லூர் வசந்தம் நகர் பகுதியில் சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 கார்களின் கண்ணாடிகளை உடைத்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரமும் ஒரு டாடா ஏஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் பத்து பேர் அடங்கிய கஞ்சா கும்பல் இந்த சமூக விரோத செயலில் ஈடுபடுவதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகள் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி