திருச்சி மாவட்டம், வயலூா் முருகன் கோயிலில் ரூ. 30. 40 கோடியில் அன்னதானக் கூடம், கடைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக களிமண்ணை தோண்டி எடுத்துவிட்டு கிராவல், செம்மண் போடாமல் மீண்டும் அதே களிமண்ணை போட்டு தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர். இதனால், அஸ்திவாரத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இப்பகுதியிலுள்ள மண்ணை பரிசோதனை செய்து பாதுகாப்பான முறையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.