மணப்பாறை அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து; முதியவர் பலி

திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே பெரியராக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நல்ல கோனார், கடந்த 13ஆம் தேதி சேதுபடாடி சாய்பாபா கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ரவிச்சந்திரன் ஓட்டி வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்தார். மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி