திருச்சி மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள கம்பரசம்பேட்டை, கலெக்டர் வெல்-டர்பைன் மற்றும் கலெக்டர் வெல் திருவெறும்பூர்-கே. எப். டபிள்யூ ஆகிய மூன்று நீரேற்று நிலையங்களில் முக்கிய குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்புகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால், இன்று டிசம்பர் மூன்றாம் தேதி இந்த நீர் ஏற்ற நிலையங்களிலிருந்து குடிநீர் பெறும் பகுதிகளுக்கு விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.