திருச்சி மாவட்ட மாஸ்டர் தடகள சம்மேளனம் சார்பில், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான கோடைகால மூத்தோர் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 30 வயது முதல் 100 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் போட்டியாளர்கள் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற போட்டிகளில் பங்கேற்றனர். மொத்தம் 320 போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.