லால்குடி அருகே பாலத்தில் இருந்து கீழே விழுந்த மான் உயிரிழப்பு

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லகம் அருகே மேம்பாலத்தில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் மான் ஒன்று, மின்னல் வேகத்தில் வந்த வாகனங்களைக் கண்டு பயந்து துள்ளிக்குதித்து பாலத்தைக் கடந்து கீழே இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து பலத்த காயமடைந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானை சடலமாக மீட்டு அடக்கம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி