பாஜக சார்பில் மாநகராட்சியை கண்டித்து சங்கு ஊதும் போராட்டம்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 19, 20 வார்டுகளான சந்து கடை, பாபு ரோடு, ராணி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது. இதனால் இப்பகுதியை சார்ந்த சிலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் போரட்டம் நடத்தினர்.

தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மேயர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நல்ல குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில் சுத்தமான குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மேயரை பதவி விலக கோரியும் பாஜகவினர் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மூதாட்டி ஒருவர் சங்கு ஊத முற்பட்டார் அப்பொழுது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். தொடர்ந்து பாஜகவினர் மாநகராட்சி அலுவலகம் உள்ளே முயன்றனர். அப்பொழுது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜகவினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் மாநகராட்சி பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி