திருச்சி மாவட்டம் உத்தமர் சீலி பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முருகானந்தம், கடுமையான வயிற்று வலி காரணமாக கடந்த 23ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் கொள்ளிடம் போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.