திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பிப்ரவரி 14 முதல் 22 வரை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், 116 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் சுமார் ஒன்றரை லட்சம் புத்தகங்கள் விற்பனையானதாகவும், இதன் மூலம் ₹2 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாகவும் திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.