திருச்சி: வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த பைக் திருட்டு

திருச்சி திருவானைக்காவல் திம்மராயசமுத்திரம் புதுகாலனியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன் சம்பவத்தன்று தன் வீட்டுவாசலில் தன்னுடைய டூவீலரை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். காலையில் எழுந்துபார்த்தபோது டூவீலர் மாயமாகியிருந்தது. அதிர்ச்சியடைந்த சிவராமகிருஷ்ணன் இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி