இவரது கணவர் தங்கராஜ் திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வருவதாக கூறிச் சென்றார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்