திருச்சி: மின்சாரம் தாக்கி விவசாயக் கூலி தொழிலாளி பலி

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் விவசாயக் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடந்த நேற்று (ஜூன் 13) புங்கனூர் குளம் அருகே இம்மானுவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணி மேற்கொண்டிருந்தார்.

அப்பொழுது மின் வயர் ஒன்று அறுந்து அவர் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி