துறையூரில் லாரி மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி

துறையூர் பழைய ஆர்டிஓ அலுவலகம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் கரூர் மாவட்டம் கீழநங்கவரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (25) உயிரிழந்தார். கோபாலகிருஷ்ணனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி