திருச்சி அருகே லாரி மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி

திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா, கடந்த 1ஆம் தேதி பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுகனூர் போலீசார் உடற்கூறாய்வு செய்து, லாரி ஓட்டுநர் சுரேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி