அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,351-வது சதய விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட செயலாளர்கள் ஆர். மனோகரன், கார்த்திகேயன், யோகநாதன் ஆகியோர் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.