மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முகமது அன்சார் சொந்தமாக மினி பஸ் வைத்துள்ளார் சம்பவம் நடந்த நேற்று முன்தினம் உறவினர் இல்லத்தில் நடைபெற்ற சுப காரியத்திற்கு செல்வதற்காக துறையூர் அருகே உள்ள டி.களத்தூர்க்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் தங்க நகைகள், 7 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து முகமது அன்சார் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மோப்பநாய் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.