திருச்சி: கட்டிலில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தை பலி

திருச்சி பொன்மலையைச் சேர்ந்த தரம் சிங் மீனா வீட்டில், உறவினரின் இரண்டரை வயது மகள் பாரி மீனா கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி