ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 2 புதிய இனங்கள்!

திருச்சி வனக்கோட்டம், ஸ்ரீரங்கம், மேலணை காப்புக்காட்டில் தமிழக வனத்துறையால் 25 ஏக்கர் பரப்பளவில் 2015-ஆம் ஆண்டு ஆசியாவிலேயே மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சி பாதுகாப்பு பூங்கா தொடங்கப்பட்டது. இங்கு இதுவரை 5 குடும்பங்களைச் சேர்ந்த 129 வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அண்மையில், பனைச்சிறகன் (காமன் பால்ம் ப்ளை) மற்றும் அக்னிவா்ணன் (பரோநெட்) ஆகிய இரண்டு புதிய வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டு, மொத்த இனங்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 112 வகை பறவை இனங்களும் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி