திருச்செந்தூர் கடற்கரை திடீரென 100 அடி உள்வாங்கியது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்புள்ள கடற்கரை இன்று (நவ., 28) திடீரென சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால், கடலுக்குள் இருக்கும் பாசிபடிந்த பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வெளியே தென்பட்டன. இதை கண்ட பக்தர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

தொடர்புடைய செய்தி