சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண் கண்ணாடியை பயன்படுத்துகின்றனர். கண்ணாடிகளை நாம் பயன்படுத்தி, பின் உறையில் வைப்பது நல்லது. கண்ணாடி பாகம் மேஜையில் படுமாறு வைக்க கூடாது. ஒவ்வொரு நாளும் மென்மையான துணியால் கண்ணாடியை துடைத்து பயன்படுத்தலாம். கையால் கண்ணாடியை கழற்றும்போது, விளிம்பு இணையும் பகுதியில் கைவைத்து கழற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் மற்றொருவரின் கண்ணாடியை பயன்படுத்த வேண்டாம். இதனால் அசௌகரியம் ஏற்படும்.