விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றம்: ஜனவரி 1 முதல் அமல்

சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் பொதிகை, நெல்லை மற்றும் சோழன் உள்ளிட்ட முக்கிய விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டு, வரும் ஜன.1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிய மாற்றத்தின்படி, பொதிகை எக்ஸ்பிரஸ் இரவு 07:35 மணிக்கும், நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 08:50 மணிக்கும், சோழன் எக்ஸ்பிரஸ் காலை 08:00 மணிக்கும் எழும்பூரிலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றங்கள் முதல்கட்டமாக தேசிய ரயில் விசாரணை அமைப்பின் (NTES) செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி