பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருத்தமாக இருக்கும் என்பதை கூறும் வகையில் பல சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு. அந்த வகையில் சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒரு நாகப்பாம்பு காட்டு பாதையில் நிற்கிறது. அதை நோக்கி புலி வருகிறது. பின்னர் பாம்பை கண்ட பயத்தில் புலி பின்னோக்கி நடந்து செல்வது பதிவாகியுள்ளது.