கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உலாந்தி வனச்சரகத்தில், டாப்சிலிப்புக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், அம்புலி தங்கும் விடுதி அருகே புலி ஒன்று சாலையைக் கடந்து சென்றது. இதை சுற்றுலாப் பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். வனத்துறையினர் புலி நடமாட்டத்தை ஆய்வு செய்து, சுற்றுலாப் பயணிகள் மாலை 5 மணிக்கு மேல் தங்கும் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.