திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட புலிகள் நேற்று சாலையில் சுற்றித் திரிந்தன. இதனால், பேரிஜம் ஏரி, மதிக்கட்டான்சோலை, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளது. கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்திருக்கும் நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினகரன்