AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வந்ததுதான் வந்தது, அதை பயன்படுத்தி நாள்தோறும் போலியாக வீடியோ, புகைப்படம் போன்றவற்றை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் போர்ப்புவதை சிலர் வேலையாக வைத்துள்ளனர். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் முதியவரை புலி தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்நிலையில், அது முழுக்க முழுக்க AIயால் உருவாக்கப்பட்ட வீடியோ என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.