'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷுடன் இணைந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அபினய் (43). கல்லீரல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு நடிகர் தனுஷ் மற்றும் கேபிஓய் பாலா உள்ளிட்ட பல நடிகர்கள் உதவி செய்தனர். பல மாதங்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர் இன்று (நவ.10) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலக வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.