நடிகை ரவீனாவை துன்புறுத்தும் இரட்டைச் சகோதரர்கள்

தனக்கும் குடும்பத்தினருக்கும் 4 ஆண்டுகளாக ஆபாச குறுஞ்செய்திகள் வருவதாக நடிகை ரவீனா ரவி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். சபரீஷ் என்பவரும் அவரது இரட்டை சகோதரர் ஆகியோர் தன்னை அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வருவதாகவும், அருவருப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி தன்னை துன்புறுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ரவீனா, ஒரு கிடாயின் கருணை மனு, ராக்கி, லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி