டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சி பிரிவில், ஸ்காட்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு மோதுகின்றன. குரூப் பி பிரிவில் கொழும்பில் நடைபெறும் போட்டியில் ஓமன் அணியை ஜிம்பாப்வே எதிர்கொள்கிறது. அதேபோல், குரூப் டி பிரிவில் அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.