இளம்பெண் பலாத்காரம் செய்து நகை பறிப்பு.. 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற ஒரு கும்பல், பாலியல் வன்கொடுமை செய்து நகை, பணத்தை பறித்துவிட்டுச் சென்றுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், பாத்திமா நகரைச் சேர்ந்த மோஹித், ரித்தீஷ், திலோத் பெர்லின் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதில் மோஹித், அப்பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி