போலீஸ் என கூறி காதல் ஜோடியிடம் பணம் பறித்த மூவர் கைது

கேரளம் மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு விடுதியில், 24 வயது இளைஞர் தனது 22 வயது காதலியுடன் அறை எடுத்து 4 நாட்கள் தங்கி இருந்தனர். அப்போது அங்கு சென்ற 3 பேர், தாங்கள் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என கூறி அறைக்குள் நுழைந்துள்ளனர். பின்னர், காதலர்களை தாக்கி, அவர்கள் மேஜையில் வைத்திருந்த தங்க வளையல், ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி