ஈரான் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டல் கருத்தை முற்றிலும் ஏற்பதற்கில்லை என போப் லியோ இன்று (ஏப்.8) தெரிவித்துள்ளார். ஒரு தேசத்தின் அழிவு குறித்து பேசுவது நாகரிகமான உலகிற்கு அழகல்ல என சுட்டிக்காட்டியுள்ள அவர், வன்முறையை தவிர்த்து தூதரக ரீதியான தீர்வுகளை காண வலியுறுத்தியுள்ளார். போப்பின் இந்த கருத்து, மத்திய கிழக்கு போர் பதற்றத்தில் புதியதொரு தார்மீக திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.